/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையோர வளைவில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை சாலையோர வளைவில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
சாலையோர வளைவில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
சாலையோர வளைவில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
சாலையோர வளைவில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ADDED : செப் 14, 2025 02:17 AM

வாலாஜாபாத்:வேடல் சாலையில் அடுத்தடுத்துள்ள இரு வளைவுகளில் விபத்து ஏற்படாமல் தடுக்க தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது வேடல் கிராமம். இக்கிராமத்தில் இருந்து, காரை வழியாக சீயட்டி, ஆண்டிசிறுவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது.
இதில், வேடல் டாஸ்மாக் அருகே குறுகிய சாலையில் அடுத்தடுத்து இரு இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. இச்சாலை வளைவுகளில் பயணிக்கும்போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். வேகமாக வரும் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எ னவே, சாலை வளைவு பகுதிகளில், இரும்பு தடுப்புகள் ஏற்படுத்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.