/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வல்லத்தில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ரேஷன் கடைவல்லத்தில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ரேஷன் கடை
வல்லத்தில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ரேஷன் கடை
வல்லத்தில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ரேஷன் கடை
வல்லத்தில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ரேஷன் கடை
ADDED : மார் 17, 2025 12:59 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில், 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்பெருமாள் கோவில் சாலையோரம் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தில், ரேஷன் கடை இயங்கி வருகிறது.
இதனால், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டிதர வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ.,, தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 2021 - 2022 நிதியாண்டுல், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் இப்பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, வல்லம் சிவன் கோவில் அருகே, புதிய ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஒராண்டாக, திறப்பு விழா காணாமல், பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
இதனால், புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையின் மீது வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி உள்ளிட்டவை சேதமடைந்து உடைந்து உள்ளது. திறப்பு விழாவிற்கு முன்னதாவே, புதிய ரேஷன் கடை கட்டடம் பாழாகும் நிலையில் உள்ளது.
அதிகாரிகளின் அலட்சியத்தால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடம் வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய ரேஷன் கடை கட்டடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.