மிலிட்டரி சாலையில் மழைநீர் குட்டை
மிலிட்டரி சாலையில் மழைநீர் குட்டை
மிலிட்டரி சாலையில் மழைநீர் குட்டை
ADDED : மே 22, 2025 12:57 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஓரிக்கை பாலாறு மேம்பாலம் அருகில் இருந்து, மிலிட்டரி சாலையில் இருந்து சுற்றுவட்டார பகுதிக்கு செல்வோர் சின்ன அய்யங்குளம் காலனி சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், ஓரிக்கை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி அருகில் இருந்து, 60 மீட்டர் நீளத்திற்கு மேல், ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது.
இதனால், நேற்று முன்தினம் பெய்த மழைக்கு சாலை சேதமடைந்த பகுதியில், மழைநீர் குட்டைபோல தேங்குவதால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள ஓரிக்கை, சின்ன அய்யங்குளம் காலனி சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.