/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கால்வாயில் கோரைப்புல் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் கால்வாயில் கோரைப்புல் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் கோரைப்புல் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் கோரைப்புல் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் கோரைப்புல் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : செப் 12, 2025 02:29 AM

காஞ்சிபுரம்:ஓரி க்கை ஆசிரியர் நகரில் , கால்வாயில் கோரைப்புல் வளர்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே, கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபு ரம் மாநகராட்சி, ஓரிக்கை ஆசிரியர் நகர் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை முறையாக பராமரிக் காததால், மாநகராட்சி துவக்கப் பள்ளி பின்புறம், கால்வாயில் கோரைப்புல் வளர்ந்துள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர், குடியிருப்பு பகுதியை சூழுகின்றன.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் ஓரிக்கை ஆசிரியர் நகர் வழியாக செல்லும் மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.