/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பரந்துாரில் ரயில் நிலைய திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பரந்துாரில் ரயில் நிலைய திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா
பரந்துாரில் ரயில் நிலைய திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா
பரந்துாரில் ரயில் நிலைய திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா
பரந்துாரில் ரயில் நிலைய திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா
ADDED : ஜூன் 28, 2025 01:29 AM

காஞ்சிபுரம்:''பரந்துாரில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தை இணைக்கும் வகையில், அங்கு ரயில் நிலையம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
தமிழகம் வந்துள்ள மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா நேற்று, காஞ்சிபுரம் சென்றார். காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை அவர் பார்வையிட்டார்.
அப்போது, பொன்னேரிக்கரை இந்திரா நகர் பகுதியில் இருந்து, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மேம்பாலத்தை இணைக்கும் பகுதி வரை சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசித்தபின், சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் சோமண்ணா உறுதி அளித்தார்.
கோவிலில் தரிசனம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்ற ரயில்வே துறை அமைச்சர் சோமண்ணா மூலவரை தரிசனம் செய்தார்.
இதையடுத்து, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின், நிருபர்களிடம் சோமண்ணா கூறியதாவது:
பரந்துாரில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தை இணைக்கும் வகையில், பரந்துாரில் ரயில் நிலையம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
மக்களை பாதிக்காத வகையில், ரயில்வே கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, சுங்குவார்சத்திரத்தில் பா.ஜ., பிரமுகர்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்றார்.
மேலும், ஸ்ரீபெரும்புதுார் தனியார் பள்ளி ஒன்றில் பங்கேற்று கண்காட்சிகளை துவக்கி வைத்து, எமர்ஜென்சி காலத்தில் இருந்து மீண்டு வந்ததை மாணவர்களிடையே உரையாடினார்.