Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ராகு - கேது பெயர்ச்சி விழா

ராகு - கேது பெயர்ச்சி விழா

ராகு - கேது பெயர்ச்சி விழா

ராகு - கேது பெயர்ச்சி விழா

UPDATED : மே 19, 2025 09:25 AMADDED : மே 18, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
கூழமந்தல்:திருக்கணித பஞ்சாங்க முறைப்படி நேற்று, மாலை 6:00 மணிக்கு, ராகு பகவான், மீன ராசியில் இருந்து, கும்ப ராசிக்கும், கேது பகவான், கன்னி ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகினர்.

இதையொட்டி காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை, கூழமந்தல் ஏரிக்கரையில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், ராகு - கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.

இதையொட்டி, நேற்று, மதியம் 2:00 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணியர் மற்றும் 27 நட்சத்திர அதி தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மாலை 3:00 மணிக்கு கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், 27 நட்சத்திரங்களான பரிகார ஹோமமும். மாலை 6:00 மணிக்கு ராகு - கேது பெயர்ச்சி கலசாபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாத வினியோகம் உள்ளிட்டவை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us