/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மக்கள் குறைதீர் கூட்டம் 390 மனுக்கள் ஏற்பு மக்கள் குறைதீர் கூட்டம் 390 மனுக்கள் ஏற்பு
மக்கள் குறைதீர் கூட்டம் 390 மனுக்கள் ஏற்பு
மக்கள் குறைதீர் கூட்டம் 390 மனுக்கள் ஏற்பு
மக்கள் குறைதீர் கூட்டம் 390 மனுக்கள் ஏற்பு
ADDED : மே 27, 2025 01:14 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்றுநடந்தது.
இதில், உதவித்தொகை கேட்டு, ஆக்கிரமிப்புஅகற்றுவது, ரேஷன் அட்டை கேட்டு, பட்டா திருத்தம் என, பல்வேறு வகையிலான உதவித்தொகைக்காக, 390 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்டட துறை அதிகாரிகளிடம் உரியநடவடிக்கை எடுக்கஅறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர், துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், 5மாற்றுத்திறனாளிகளுக்கு 5.15 லட்ச ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரும், 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 31,795 ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்களையும் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
மேலும், 10 பயனாளிகளுக்கு 1.30 லட்சம் மதிப்பிலான மொபைல் போன்களும் என, மொத்தம் 20 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 6.76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்விவழங்கினார்.