/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சட்ட விரோத பத்திரப்பதிவு தவிர்க்க கோரி வாயில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு சட்ட விரோத பத்திரப்பதிவு தவிர்க்க கோரி வாயில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு
சட்ட விரோத பத்திரப்பதிவு தவிர்க்க கோரி வாயில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு
சட்ட விரோத பத்திரப்பதிவு தவிர்க்க கோரி வாயில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு
சட்ட விரோத பத்திரப்பதிவு தவிர்க்க கோரி வாயில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு
ADDED : செப் 11, 2025 02:50 AM

வாலாஜாபாத்:அரசு சார்ந்த ஆக்கிரமிப்பு நிலங்களை சட்ட விரோத முறையில் விற்பனை செய்வதை தவிர்க்க கோரி, வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்த குழுவினர் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும், வாலாஜாபாத் வலம்புரி விநாயகர் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்தவருமான சேகர் என்பவர் வாலாஜாபாத் சார் - பதிவாளர் செல்வம் அவர்களிடம் நேற்று மனு அளித்தார்.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
வாலாஜாபாத்தில், சர்வே எண்; 254/2ல், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமாக கோவில் மனை அமைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக வருவாய்த் துறை ஆவணங்கள் மனுவுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அம்மனையை பட்டா பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்ய அரசியல் பிரமுகர்கள் சிலர் முயன்று வருகின்றனர். எனவே, இந்த புல எண்ணில் எந்த வகை ஆவணங்கள் தங்களிடம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் அதை புறக்கணிக்க வேண்டும். அந்த ஆவண தாக்கலையடுத்து, எங்களுடைய ஆட்சேபனையை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சார் - பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மனு அளிக்க வந்தவர்கள் குழுவாக சார் - பதிவாளர் அலுவலகம் எதிரே ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேபோன்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலர் செல்வத்திடம் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில், 'வாலாஜாபாத் வட்டாரம், வள்ளுவப்பாக்கம் கிராமத்தில், சர்வே எண்; 45, அரசுக்கு சொந்தமான ஏரி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'எனவே, இந்த சர்வே எண் கொண்ட நீர் நிலையில் உட்பிரிவு செய்யப்பட்ட எந்த ஒரு தனி நபரும் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது' என, கூறப்பட்டு உள்ளது.