/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வி.சி., சார்பில் வாலாஜாபாதில் ஆர்ப்பாட்டம் வி.சி., சார்பில் வாலாஜாபாதில் ஆர்ப்பாட்டம்
வி.சி., சார்பில் வாலாஜாபாதில் ஆர்ப்பாட்டம்
வி.சி., சார்பில் வாலாஜாபாதில் ஆர்ப்பாட்டம்
வி.சி., சார்பில் வாலாஜாபாதில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 11, 2025 02:21 AM
வாலாஜாபாத்:புத்தகரத்தில் ஆதிதிராவிடர் தெருவில் தேர் உலா வர வலியுறுத்தி, வி.சி., கட்சி சார்பில் வாலாஜாபாதில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
'வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலான முத்து கொளக்கியம்மன் கோவில் தேர், ஆதிதிராவிடர் தெருவில் உலா வர வேண்டும்; அரசு நிதியில் 28 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக செய்த தேரை எரிக்க முயன்ற நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் காஞ்சி தெற்கு மாவட்டச் செயலர் எழிலரசு தலைமை தாங்கினார்.
அக்கட்சியின் துணை பொதுச்செயலரும், திருப்போரூர் வி.சி., -- எம்.எல்.ஏ.,வுமான பாலாஜி, முன்னாள் மாவட்டச் செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.