/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பரனுார் சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டம்பரனுார் சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டம்
பரனுார் சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டம்
பரனுார் சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டம்
பரனுார் சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டம்
ADDED : பிப் 11, 2024 12:35 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பரனுார், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற கோரி அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சி.பி.ஐ., மாநில செயலர் முத்தரசன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி, திருப்போரூர் எம்.எல்.ஏ.,பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பரனுார் சுங்கச்சாவடியை அகற்ற, 2019ம் ஆண்டு தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இன்று வரை சுங்கச்சாவடி மூடப்படவில்லை. சுங்கச்சாவடியை அகற்ற மத்தியஅரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும். அதனால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல. மத்திய அரசு தான் பொறுப்பு என, போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சி நிர்வாகிகள் கூறினர்.
இந்த போராட்டத்தில், தி.மு.க., கம்யூனிஸ்ட், வி.சி.க., வணிக சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100க்கும் மேற்பட்ட போலீசார் பரனுார் சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.