/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ எஸ்.சி., - எஸ்.டி., வழக்கில் போலீசார் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் எஸ்.சி., - எஸ்.டி., வழக்கில் போலீசார் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
எஸ்.சி., - எஸ்.டி., வழக்கில் போலீசார் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
எஸ்.சி., - எஸ்.டி., வழக்கில் போலீசார் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
எஸ்.சி., - எஸ்.டி., வழக்கில் போலீசார் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 13, 2025 12:35 AM

காஞ்சிபுரம்:எ ஸ்.சி., - எஸ்.டி., வழக்கில், அலட்சியமாக செயல்படும் போலீசார் நடவடிக்கையை கண்டித்து, காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் நேற்று, கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.சி., - எஸ்.டி., வழக்கு ஒன்றில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என, காஞ்சி புரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல், காஞ்சி புரம் டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்டிருந்தார். டி.எஸ்.பி.,யை நீதிமன்ற ஊழியர்கள், 0நீதிபதியின் காரிலேயே கிளை சிறைக்கு அழைத்து சென்றனர்.
நீதிபதியின் கைது உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் மனு தாக்கல் செய்தார். டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் கைது உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகளில் போலீசார் முறையான விசாரணை மேற்கொள்வதில்லை எனவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் கூறி, வழக்கறிஞர்கள் நேற்று காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.