/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பொங்கல் புத்தாடை விற்பனை காஞ்சிபுரத்தில் களை கட்டியதுபொங்கல் புத்தாடை விற்பனை காஞ்சிபுரத்தில் களை கட்டியது
பொங்கல் புத்தாடை விற்பனை காஞ்சிபுரத்தில் களை கட்டியது
பொங்கல் புத்தாடை விற்பனை காஞ்சிபுரத்தில் களை கட்டியது
பொங்கல் புத்தாடை விற்பனை காஞ்சிபுரத்தில் களை கட்டியது
ADDED : ஜன 08, 2024 05:16 AM

காஞ்சிபுரம் : தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 15ல் கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை ஒட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள சிறிய மற்றும் பெரிய ஜவுளிக்கடைகளில் புத்தாடைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
மேலும், பிரதான சாலைகளில் உள்ள திருமண மண்டபங்களில் சீசன் நேர ஜவுளிக்கடைகளும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள சிறு வியாபாரிகளும் நடைபாதையில் சீசன் நேர ஜவுளிக்கடை வைத்துள்ளனர்.
புத்தாடை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், விடுமுறை தினமான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடைகளில் புத்தாடை விற்பனை களைகட்டியது.
இதனால், காந்தி சாலை, காமராஜர் சாலை, ரயில்வே சாலை, ராஜ வீதி பகுதிகளில் உள்ள பெரிய ஜவுளிக்கடை முதல், சிறிய ஜவுளிக்கடை, நடைபாதை ஜவுளிக்கடைகளிலும் பொங்கல் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
நகரின் முக்கிய சாலைகளான காந்தி சாலை, காமராஜர் வீதி, ரயில்வே சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.