/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ போன் தராததால் மாயமான சிறுவனை மீட்ட போலீசார் போன் தராததால் மாயமான சிறுவனை மீட்ட போலீசார்
போன் தராததால் மாயமான சிறுவனை மீட்ட போலீசார்
போன் தராததால் மாயமான சிறுவனை மீட்ட போலீசார்
போன் தராததால் மாயமான சிறுவனை மீட்ட போலீசார்
ADDED : செப் 18, 2025 11:05 PM
படப்பை:படப்பையில், விளையாட மொபைல் போன் தராததால், கடிதம் எழுதி வைத்து, வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை, போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
குன்றத்துார் அருகே உள்ள படப்பை முருகாத்தம்மன்பேட்டையை சேர்ந்த 11 வயது சிறுவன், படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், தனக்கு நாய் குட்டி வாங்கி தராததாலும், விளையாட மொபைல் போன் தராததாலும், வீட்டை விட்டு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது சைக்கிளை எடுத்து கொண்டு, நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து மாயமானார்.
கடிதத்தை பார்த்து அதிர்ச்சியான பெற்றோர், பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
படப்பை, மண்ணிவாக்கம், பெருங்களத்துார், தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, பெருங்களத்துாரில் உள்ள பெட்ரோல் பங்கில் நின்றிருந்த சிறுவனை, மணிமங்கலம் போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.