/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பழவேரி - தாம்பரம் இடையே நேரடி பேருந்து கோரி மனு பழவேரி - தாம்பரம் இடையே நேரடி பேருந்து கோரி மனு
பழவேரி - தாம்பரம் இடையே நேரடி பேருந்து கோரி மனு
பழவேரி - தாம்பரம் இடையே நேரடி பேருந்து கோரி மனு
பழவேரி - தாம்பரம் இடையே நேரடி பேருந்து கோரி மனு
ADDED : மார் 20, 2025 08:26 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி ஊராட்சி தலைவர் பாஸ்கரன், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்திரமேரூர் ஒனறியத்திற்கு உட்பட்ட பழவேரி, சீத்தாவரம், அரும்புலியூர், கரும்பாக்கம், மாம்பாக்கம், விச்சூர், திருவானைக்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், சென்னை புறநகர் பகுதிக்கு சென்று வர பேருந்து வசதி இல்லாத நிலை நீண்ட காலமாக தொடர்கிறது.
இப்பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் உள்ளிட்டோர் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்விக்கூடம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்ல, செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து தாம்பரம் செல்லும் நிலை உள்ளது.
செங்கல்பட்டுக்கு போதுமான பேருந்து வசதி இல்லாத நிலையில், நேரம் விரயம், கூடுதல் பேருந்து கட்டணம், அலைச்சல் உள்ளிட்ட பல சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பழவேரியில் இருந்து, தாம்பரம் வரை காலை மற்றும் மாலை நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த கோரி தங்களிடம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தோம்.
தாங்களும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து பொது மேலாளருக்கு மனு அளித்தீர்கள். அக்கோரிக்கை மீதான திட்ட நடவடிக்கை இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
எனவே, பழவேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பயன்பெறும் வகையில், தாம்பரத்திற்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.