/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சிபுரம் வரை நீட்டிக்க மனுபரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சிபுரம் வரை நீட்டிக்க மனு
பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சிபுரம் வரை நீட்டிக்க மனு
பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சிபுரம் வரை நீட்டிக்க மனு
பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சிபுரம் வரை நீட்டிக்க மனு
ADDED : ஜன 10, 2024 10:02 PM
காஞ்சிபுரம்:பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை, காஞ்சிபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
மனு விபரம்:
காஞ்சிபுரம் அருகே பரந்துாரில் விமான நிலையம் அமைய உள்ளதால், சென்னை -மெட்ரோ ரயில் வழித்தடத்தை பூந்தமல்லியில் இருந்து, பரந்துார் விமான நிலையம் வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து, பரந்துார் 10 கி.மீ, துாரத்திலும், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரிக்கரையில் அமைய உள்ள காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, 7 கி.மீ., தொலைவிலும் உள்ளது.
பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சி ரயில் நிலையத்துடன் இணைத்தால், பரந்துார் விமான நிலையத்தில் இருந்து பயணியர், காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கும், ரயில் நிலையத்திற்கும் வந்து, பல்வேறு பகுதிக்கு செல்ல முடியும்.
காஞ்சிபுரம் கோவில் நகரமாகவும், பட்டு நகரமாகவும் உள்ளதால், விமான பயணியருக்கும், பக்தர்களுக்கும் மெட்ரோ ரயில் தடம் இணைப்பு வரப்பிரசாதமாக இருக்கும்.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியினர், சென்னையின் பல்வேறு பகுதிக்கு சென்று வர மெட்ரோ ரயில் இணைப்பு வசதியாக இருக்கும்.
எனவே, பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை, காஞ்சிபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.