/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/'மக்களுடன் முதல்வர்' திட்டம் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்'மக்களுடன் முதல்வர்' திட்டம் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : ஜன 04, 2024 08:48 PM

காஞ்சிபுரம்:தமிழக அரசின், 'மக்களுடன் முதல்வர்' என்ற சிறப்பு திட்டத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்ப்புறத்தை சுற்றியுள்ள ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று தீர்வு காணும் முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.
மாவட்டம் முழுதும் வரும் 30ம் தேதி வரை இம்முகாம் நடக்கிறது. இதில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் இம்முகாம் எட்டு இடங்களில் நடக்கிறது.
முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஆட்டோவில் ஒலிப்பெருக்கி வாயிலாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று 'மக்களுடன் முதல்வர்' திட்டம் குறித்தும், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள், முகாம் எந்த இடத்தில் நடக்கிறது, முகாமிற்கு வருவோர் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் எவை என்பன உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வீடு வீடாக வழங்கி வருகின்றனர்.