/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கரும்பு சக்கை எரிப்பு புகையால் மக்கள் அவதி கரும்பு சக்கை எரிப்பு புகையால் மக்கள் அவதி
கரும்பு சக்கை எரிப்பு புகையால் மக்கள் அவதி
கரும்பு சக்கை எரிப்பு புகையால் மக்கள் அவதி
கரும்பு சக்கை எரிப்பு புகையால் மக்கள் அவதி
ADDED : செப் 10, 2025 03:20 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையோரம் கரும்பு சக்கையை தீயிட்டு எரிப்பதால், ஏற்படும் புகையால் வாகன ஓட்டிகளும், பகுதி மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலை, ஹோட்டல் தமிழ்நாடு எதிரில், ரயில்வே இருப்புபாதையோரம் கரும்பு ஜூஸ் கடை உள்ளது.
இக்கடையில் மீதமாகும் கரும்பு சக்கையை முழுமையாக அகற்றாமல், மீதமுள்ள சக்கையை இரவு நேரத்தில் தீ வைத்து விடுகின்றனர்.
இதனால், கரும்பு சக்கை தீயில் இருந்து வெளியாகும் கெட்ட வாடை மற்றும் புகையால் சாலையில் செல்லும் இருக்கர வாகன ஓட்டிகளும் அருகில் உள்ள எஸ்.எஸ்.கே., நகர் பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, கரும்பு சக்கையை எரிக்காமல், அதை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.