/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அடிக்கடி மின் தடையால் திம்மராஜம்பேட்டை மக்கள் அவதி அடிக்கடி மின் தடையால் திம்மராஜம்பேட்டை மக்கள் அவதி
அடிக்கடி மின் தடையால் திம்மராஜம்பேட்டை மக்கள் அவதி
அடிக்கடி மின் தடையால் திம்மராஜம்பேட்டை மக்கள் அவதி
அடிக்கடி மின் தடையால் திம்மராஜம்பேட்டை மக்கள் அவதி
ADDED : ஜூன் 17, 2025 12:10 AM
வாலாஜாபாத், திம்மராஜம்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் அறிவிப்பு இல்லாமல் ஏற்படும் திடீர் மின்வெட்டால் அப்பகுதியினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாலாஜாபாத் அடுத்து திம்மராஜம்பேட்டை, சீயமங்கலம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி, பூசிவாக்கம், வில்லிவலம், தாங்கி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களுக்கு, அய்யம்பேட்டை மின் பகிர்வான் கழகம் வாயிலாக மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இப்பகுதிகளில், ஒரு மாதமாக நாளொன்றுக்கு நான்கு முறைக்கு மேலாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
இதனால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பாகி வருவதாகவும், வீடுகளிலும் மின் சார்ந்த பணிகள் செய்ய இயலாமல் சிரமம் ஏற்படுவதாக கூறி வருகின்றனர்.
இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையால் கொசு தொல்லையில் சிக்கி குழந்தைகள் முதல் முதியோர் வரை துாக்கமின்றி அவதிப்படுவதாக புலம்பி வருகின்றனர்.
எனவே, திம்மராஜம்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் அறிவிப்பின்றி மின்வெட்டு ஏற்படுவதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.