/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் பயணியர் கடும் அவதிபஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் பயணியர் கடும் அவதி
பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் பயணியர் கடும் அவதி
பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் பயணியர் கடும் அவதி
பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் பயணியர் கடும் அவதி
ADDED : ஜன 30, 2024 10:01 PM

ஒரகடம்:ஒரகடம் அடுத்த கிருஷ்ணா கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை நிறுவனங்களுக்கு செல்ல, அதிகமான பொதுமக்கள் பேருந்திற்காக காத்திருப்பர்.
இந்த நிறுத்தத்தை ஒட்டி, பல மாதங்களாக கழிவுநீர் தேங்குகிறது. அருகில் உள்ள ஹோட்டல், டீ கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, குழாய் வழியாக சாலையில் விடுகின்றனர்.
இதனால், பேருந்து நிறுத்தத்தில் கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. பேருந்திற்காக காத்திருக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், இதனால் கடும் சிரமப்படும் நிலை உள்ளது.
மேலும், சுவாச பிரச்னையால் பயணியர் சிரமப்படுகின்றனர். ஏனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.