/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் பயணியர் அவதி காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் பயணியர் அவதி
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் பயணியர் அவதி
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் பயணியர் அவதி
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் பயணியர் அவதி
ADDED : ஜூன் 02, 2025 01:29 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலைய சாலையின் இருபுறமும் உள்ள பழம், டீ, ஸ்வீட்ஸ், பூக்கடை, உணவகம் உள்ளிட்ட கடையினர், நடைபாதை மட்டுமின்றி சாலையையும் 10 அடிக்கும் மேல் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.
சாலையின் அகலம் வெகுவாக குறைந்துவிட்டதால், பயணியர் அவதிபடுகின்றனர். பேருந்து நிலையத்தில் இருந்து, பேருந்தை வெளியே எடுத்து வருவதற்கு டிரைவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஆக்கிரமிப்பு கடைகளால், பேருந்து நிலையத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.