/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/நிதி குறைப்பால் திணறும் ஊராட்சி நிர்வாகங்கள்நிதி குறைப்பால் திணறும் ஊராட்சி நிர்வாகங்கள்
நிதி குறைப்பால் திணறும் ஊராட்சி நிர்வாகங்கள்
நிதி குறைப்பால் திணறும் ஊராட்சி நிர்வாகங்கள்
நிதி குறைப்பால் திணறும் ஊராட்சி நிர்வாகங்கள்
ADDED : ஜன 05, 2024 10:09 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், 73 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளுக்கு மாதந்தோறும் மாநில நிதி குழு மானியம் என்ற பெயரில் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த நிதியின் மூலம், ஊராட்சி நுாலகர் மற்றும் குடிநீர் குழாய் ஆப்பரேட்டர்களுக்கு ஊதியம் வழங்குதல், குடிநீர் பராமரிப்பு பணி, மின்மோட்டார் பழுது நீக்குதல், தெருவிளக்குகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிதிக்குழு மானியத்தில் இருந்து வழங்கப்படும் நிதி, கடந்த சில மாதங்களாக குறைத்து வழங்கப்படுவதாகவும், குறைவான நிதியை வைத்து ஊராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாமலும், கிராம ஊராட்சிகளில் தேவையான பணிகள் மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக உள்ளாட்சி நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, உத்திரமேரூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறியதாவது:
உத்திரமேரூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 73 ஊராட்சிகளில், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஐந்தாறு ஊராட்சிகள் தவிர்த்து மற்ற ஊராட்சிகளுக்கு மிகவும் குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது.
இதனால், ஊராட்சிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால் கிராம மக்கள் மத்தியில், ஊராட்சி தலைவர்கள் அவப்பெயரை சம்பாதிக்கும் நிலை ஏற்படும்.
எனவே, ஊராட்சிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.