/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பல்லக்கு உற்சவம் விமரிசைராமலிங்கேஸ்வரர் கோவிலில் பல்லக்கு உற்சவம் விமரிசை
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பல்லக்கு உற்சவம் விமரிசை
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பல்லக்கு உற்சவம் விமரிசை
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பல்லக்கு உற்சவம் விமரிசை
ADDED : பிப் 23, 2024 11:35 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், நேற்று 83ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று வெகுவிமரிசையாக துவங்கியது. இதை முன்னிட்டு, ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
மதியம் 1:00 மணிக்கு பல்லக்கில் எழுந்தருளிய ராமலிங்கேஸ்வரர் வீதியுலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.