/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
ADDED : மே 10, 2025 01:20 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 26வது வார்டு, பெரியார் நகர் பகுதியினருக்கு குடிநீர் வழங்குவதற்காக, திராவிடமணி தெருவில், 35 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
குடிநீர் தொட்டியில் உள்ள நான்கு துாண்கள்மற்றும், தொட்டியின் அடிப்பாகத்தில் சிமென்ட் காரை உதிர்ந்து கம்பி வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
பயன்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதால், நாளுக்கு நாள் விரிசல் அதிரித்து வருகிறது. இதனால் தொட்டி எப்போது இடிந்து விழுமோ என, அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.
சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெரியார் நகர் பகுதியினர் வலியுறுத்திஉள்ளனர்.