/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கிடப்பில் சாலை பணி ஒட்டங்கரணை மக்கள் அவதி கிடப்பில் சாலை பணி ஒட்டங்கரணை மக்கள் அவதி
கிடப்பில் சாலை பணி ஒட்டங்கரணை மக்கள் அவதி
கிடப்பில் சாலை பணி ஒட்டங்கரணை மக்கள் அவதி
கிடப்பில் சாலை பணி ஒட்டங்கரணை மக்கள் அவதி
ADDED : ஜூன் 12, 2025 11:26 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஒட்டங்கரணை சாலையில், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு, சாலை பணிகள் மேற்கொள்ளாமல், இரண்டு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுற்றுவட்டார கிராமத்தினர், ஒட்டங்கரணை சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை, சில ஆண்டுகளாக சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக இருந்தது.
இதனால், இப்பகுதியினர், இந்த சாலையில் சென்றுவர, மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, புதிய சாலையை அமைக்கும் பணி, ஏப்., மாதம் துவங்கியது. ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களுக்கு மேலாக, சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலையில், தார் ஊற்றி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.