/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஓரிக்கை மணிமண்டபம் சாலையில் விளக்கின்றி மின்கம்பங்கள் அமைப்புஓரிக்கை மணிமண்டபம் சாலையில் விளக்கின்றி மின்கம்பங்கள் அமைப்பு
ஓரிக்கை மணிமண்டபம் சாலையில் விளக்கின்றி மின்கம்பங்கள் அமைப்பு
ஓரிக்கை மணிமண்டபம் சாலையில் விளக்கின்றி மின்கம்பங்கள் அமைப்பு
ஓரிக்கை மணிமண்டபம் சாலையில் விளக்கின்றி மின்கம்பங்கள் அமைப்பு
ADDED : பிப் 10, 2024 11:05 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாற்றங்கரையில் மஹா பெரியவர் மணிமண்டபம் உள்ளது. மணிமண்டபத்திற்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஓரிக்கை பாலாறு மேம்பாலத்தை ஒட்டியுள்ள சாலையில் இருந்து, மஹா பெரியவர் மணிமண்டபத்திற்கு செல்லும் சாலையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை.
இதனால், இரவு நேரத்தில் இப்பகுதி கும்மிருட்டாக காட்சியளிப்பதால், இச்சாலை வழியாக மஹா பெரியவர் மணிமண்டபத்திற்கு செல்லும் பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் அரங்கேறும் நிலை உள்ளது.
எனவே, இச்சாலையில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்கு பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.