/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஒரத்துார், வரதராஜபுரம் தடுப்பணை பணிகள்... முடக்கம் ! ஒரத்துார், வரதராஜபுரம் தடுப்பணை பணிகள்... முடக்கம் !
ஒரத்துார், வரதராஜபுரம் தடுப்பணை பணிகள்... முடக்கம் !
ஒரத்துார், வரதராஜபுரம் தடுப்பணை பணிகள்... முடக்கம் !
ஒரத்துார், வரதராஜபுரம் தடுப்பணை பணிகள்... முடக்கம் !
ADDED : ஜூன் 25, 2024 06:28 AM

குன்றத்துார் : காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பை குறைக்க, அடையாறு கால்வாய் குறுக்கே, ஒரத்துார் மற்றும் வரதராஜபுரத்தில், 67 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட தடுப்பணை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. நான்கு பணிகள் நடக்காததால், தடுப்பணை பகுதியில் மண் கடத்தலும், மதகை உடைத்து இரும்பு பொருட்களை களவாடுவதும் அதிகரித்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஆதனுார், ஒரத்துார், சோமங்கலம் ஆகிய மூன்று பகுதிகளில் துவங்கும் அடையாறு கால்வாய், வரதராஜபுரத்தில் ஒன்றாக இணைந்து, புறநகர் மற்றும் சென்னையில் 42 கி.மீ., துாரம் பாய்ந்தோடி, பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.
வடகிழக்கு பருவமழை காலங்களில், அடையாறு கால்வாயில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரால் புறநகர் பகுதிகளான வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் சூழ்வது ஆண்டுதோறும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
புறநகரில் வெள்ள பாதிப்பை குறைப்பதற்கும், சென்னையின் எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, படப்பை அருகே, ஒரத்துாரில் துவங்கும் அடையாறு கால்வாய், அதன் இருபுறமும் உள்ள ஒரத்துார் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, 1 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி, 56 கோடி ரூபாயில், 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கியது.
நீர்த்தேக்கத்திற்காக அடையாறு கிளை கால்வாய் குறுக்கே, ஐந்து கண் மதகு அமைத்து, அங்கிருந்து ஆரம்பாக்கம் ஏரி வரை கரை அமைக்கப்பட்டது.
இதேபோல், மதகில் இருந்து ஒரத்துார் ஏரி வரை 420 மீட்டருக்கு கரை அமைக்கும் பணிக்கு 84 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தவில்லை.
இதனால், நீர்த்தேக்கம் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், எஞ்சிய பணிகள் நான்கு ஆண்டுகளாக முடங்கியுள்ளது.
நீர்த்தேக்க பணிகள் கிடப்பில் உள்ளதால், கரை முழுதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும் கரைகள் பலவீனமாகியும்வருகின்றன.
ஒரத்துார் நீர்த்தேக்க பணியின் நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. விரைவில் பணிகள் துவங்க உள்ளன. வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல், முடிச்சூர் தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினோம். ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொதுப்பணித் துறை அதிகாரிகள்