ADDED : பிப் 06, 2024 04:56 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, மாகரல் கிராமத்தில், வாடகை கட்டடத்தில் துணை அஞ்சலகம் இயங்கி வந்தது. அதே இடத்தில், புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த கட்டட திறப்பு விழாவிற்கு, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தலைமை வகித்து, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
மாகரல் ஊராட்சி தலைவர் மேத்தா, அஞ்சல் கோட்ட ஊழியர்கள் கேசவன், முரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.