/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைதுரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : ஜன 08, 2024 05:14 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர், 34. 'ஏ பிளஸ்' ரவுடி பிரிவில், போலீசார் கண்காணித்து வந்தனர். காஞ்சிபுரத்தில், கடந்த டிச., 26ல், இவரை, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.
இந்நிலையில், கடந்த டிச., 27ம் தேதி அதிகாலை, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே, பிரபாகர் கொலை வழக்கில் தொடர்புடைய, பல்லவர்மேட்டைச் சேர்ந்த ரகுவரன், 37, மற்றும் பாஷா, 30, ஆகிய இருவரையும் பிடிக்க முயன்றபோது, போலீசார் சுட்டதில் இருவரும் இறந்தனர்.
இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த அப்துல்லா என்பவரை போலீசார் இவ்வழக்கில் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மூவரை தேடி வந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த நவீன்குமார், 23 மற்றும் கார்த்திக், 30, ஆகிய இருவரும், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், கடந்த 2ம் தேதி சரணடைந்தனர்.
தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா என்கிற சதாம், 31, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.