/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வயிற்றுப்போக்கால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சுகாதாரம் குறித்து ஆட்டோவில் பிரசாரம் வயிற்றுப்போக்கால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சுகாதாரம் குறித்து ஆட்டோவில் பிரசாரம்
வயிற்றுப்போக்கால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சுகாதாரம் குறித்து ஆட்டோவில் பிரசாரம்
வயிற்றுப்போக்கால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சுகாதாரம் குறித்து ஆட்டோவில் பிரசாரம்
வயிற்றுப்போக்கால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சுகாதாரம் குறித்து ஆட்டோவில் பிரசாரம்
ADDED : ஜூன் 07, 2025 01:19 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரகணக்கானோர், தினமும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வயிற்றுப்போக்கு காரணமாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
நான்கு நாட்களாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர், ரங்கசாமி குளம், பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு, கைலாசநாதர் கோவில் தெரு, காஞ்சிபுரம் ஒட்டியுள்ள அய்யங்கார்குளம், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 78 பேர், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்று முன்தினம் காலையில், 33 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 45 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர். மாலையில், 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் இரவு 35 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று 4 ஆண், 4 பெண் என, 8 பேர் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதில், சிகிச்சை முடிந்து 19 பேர் வீடு திரும்பிய நிலையில், மருத்துவமனையில், 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் வாயிலாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், வயிற்றுபோக்கு காரணமாக சிகிச்சை பெறுவோருக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளது என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகர சுகாதார அலுவலர் மருத்துவர் அருள்நம்பி கூறியதாவது:
மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் விடுப்பு எதுவும், எடுக்காமல், வயிற்றுப்போக்கால் பாதிப்பு ஏதாவது உள்ளதாக என, கள ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளோம். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளான பல்லவர்மேடு, பிள்ளையார்பாளையம் மட்டுமின்றி பிற பகுதிகளிலும், ஆட்டோ ஒலிப்பெருக்கி வாயிலாக பொதுமக்களிடம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இதில், குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். கழிப்பறைக்கு சென்று வந்தபின், சோப்பு வாயிலாக கைகளை நன்றாக கழுவ வேண்டும். சுகாதார மற்ற திறந்தவெளியில் விற்கப்படும் காய்கறி, பழங்களை நன்று கழுவியபின் உண்ண வேண்டும் என, அறிவுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.