/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம் தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : செப் 22, 2025 01:01 AM

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் பல்லவர்மேடு வ.உ.சி., தெருவில் உள்ள மஹா தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் 13வது ஆண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது.
விழாவையொட்டி தினமும் இரவு 7:00 மணிக்கு தீப்பாஞ்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
அதன்படி, முதல் நாளான நேற்று, இரவு 7:00 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் தீப்பாஞ்சி அம்மன் அருள்பாலித்தார்.
இன்று முதல், ஆதி காமாட்சி, லட்சுமி தேவி, ராஜராஜேஸ்வரி, புன்னைநல்லுார் மாரியம்மன், மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, மலையனுார் அங்காளம்மன், அன்னபூரணி, சரஸ்வதி தேவி ஆகிய அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
இதில், அக். 2ம் தேதி, காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், உற்சவர் அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் உலா வருகிறார். தொடர்ந்து மகிசாசுரன் வதம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகி சங்கர் செய்துள்ளார்.