/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ யதோக்தகாரி கோவிலில் நவராத்திரி 23ல் துவக்கம் யதோக்தகாரி கோவிலில் நவராத்திரி 23ல் துவக்கம்
யதோக்தகாரி கோவிலில் நவராத்திரி 23ல் துவக்கம்
யதோக்தகாரி கோவிலில் நவராத்திரி 23ல் துவக்கம்
யதோக்தகாரி கோவிலில் நவராத்திரி 23ல் துவக்கம்
ADDED : செப் 18, 2025 11:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா வரும் 23ம் தேதி துவங்குகிறது.
விழாவையொட்டி ஒன்பது நாட்களும் மாலை 6:00 மணிக்கு தினமும் ஒரு கோலத்தில், யதோக்தகாரி பெருமாள், கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
தொடர்ந்து பிரபல உபன்யாசகர்கள் வரும் 23ம் தேதி முதல், அக்., 1ம் தேதி வரை முறையே, லக்ஷ்மி கல்யாணம், சீதா கல்யாணம், நப்பின்னை திருமணம், ஆண்டாள் திருக்கல்யாணம், ஸ்ரீனிவாச கல்யாணம், சதுச்லோகி, வேதவள்ளி கல்யாணம் ஆகிய தலைப்புகளில் மாலை 6:00 மணிக்கு உபன்யாசம் நிகழ்த்துகின்றனர்.