/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சாலையோர மண் குவியலால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் சாலையோர மண் குவியலால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
சாலையோர மண் குவியலால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
சாலையோர மண் குவியலால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
சாலையோர மண் குவியலால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
ADDED : பிப் 12, 2024 06:02 AM

ஒழையூர்: காஞ்சிபுரம் அடுத்த, ஒழையூர்- மோட்டூர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, ஒழையூர் கிராமத்தினர் காஞ்சிபுரம், ஏனாத்துார் ஆகிய பகுதிகளுக்கு சைக்கிள், இருசக்கரம் ஆகிய வாகனங்களின் சென்று வருகின்றனர்.
இந்த சாலை ஓரத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி பாசன கால்வாய் துார்ந்த நிலையில் இருந்தன.
சமீபத்தில், ஒழையூர்- மேட்டூர் ஏரி கால்வாய் துார்வாரும் பணிக்கு, ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் கால்வாய் மண் அகற்றப்பட்டது. அந்த மண்ணை பிரதான சாலை ஓரத்தில் கொட்டி உள்ளனர்.
இந்த சாலையில் போதிய மின் விளக்கு வசதிகள் கூட இல்லை. இதுபோன்ற வேளைகளில் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சாலைக்கும் வயலுக்கும் ஒரு ஆள் உயரம் இருப்பதால், கால்வாயில் இருசக்கர வாகனங்கள் கவிழும் போது உயிர் பலி ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சாலை ஓரமாக குவிக்கப்பட்டு இருக்கும் மண்ணை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.