/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பள்ளூர்- சோகண்டியில் சமனில்லாத சாலையால் வாகன ஓட்டிகள் அவதி பள்ளூர்- சோகண்டியில் சமனில்லாத சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
பள்ளூர்- சோகண்டியில் சமனில்லாத சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
பள்ளூர்- சோகண்டியில் சமனில்லாத சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
பள்ளூர்- சோகண்டியில் சமனில்லாத சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 24, 2025 08:27 PM
காஞ்சிபுரம்:பள்ளூர்-சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., துாரம் ஒரு வழி சாலை இருந்தது.
இச்சாலையில், வாகனப்போக்குவரத்து அதிகரித்ததால், 2021ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட இரு வழி சாலையாக, விரிவுப்படுத்தப்பட்டது.
ஏழு மீட்டர் சாலை அகலத்தில் இருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இரு வழி சாலைக்கு, 44 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்று, வாகன போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.
இந்த சாலை முறையாக பராமரிப்பு இல்லாததால், சாலை ஓரம் சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டிக்கிடக்கிறது. மேலும், சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது.
கடந்த டிசம்பரில் சாலை பள்ளங்களை நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்தனர். இருப்பினும், பள்ளங்களின் எண்ணிக்கை ஆங்காங்கே அதிகமாகி விட்டன.
கடந்த இரு மாதங்களுக்கு முன் கொட்டவாக்கம் முதல் பரந்துார் வரையில், புதிய சாலை செப்பணிடப்பட்டது. சாலையின் அகலம் வெகுவாக குறைக்கப்பட்டு, புதிய தார் சாலை போட்டனர்.
உதாரணமாக, புதிய தார் சாலைக்கும், ஏற்கனவே போடப்பட்ட தார் சாலைக்கும் மூன்று அங்குலம் வரையில் உயரம் இருப்பதால், புதிய சாலையில் இருந்து, பழைய சாலைக்கு ஏறி இறங்கும் போது வாகனங்கள் நிலை தடுமாறி கவிழ்ந்து விடுகின்றன. கடந்த மூன்று மாதங்களில், 15க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் அரங்கேறியுள்ளன.
எனவே, புதிதாக போடப்பட்ட சாலை சமப்படுத்தும் வாகனத்தில் வாயிலாக தார் சாலை ஓரம் சமப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.