/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தடுப்பு அமைக்காமல் கட்டடம் இடிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி தடுப்பு அமைக்காமல் கட்டடம் இடிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி
தடுப்பு அமைக்காமல் கட்டடம் இடிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி
தடுப்பு அமைக்காமல் கட்டடம் இடிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி
தடுப்பு அமைக்காமல் கட்டடம் இடிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : மே 30, 2025 10:40 PM

ஸ்ரீபெரும்புதுார்:வாலாஜாபாத் -- கீழச்சேரி, ஸ்ரீபெரும்புதுார் -காஞ்சிபுரம் சாலைகள் சந்திக்கும் இடத்தில் சுங்குவார்சத்திரம் அமைந்துள்ளது.
இங்கு, தனியார் மருத்துவமனை, வங்கிகள், பூக்கடை, ஏராளமான வணிக கடைகள் என, 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
சுங்குவார்சத்திரம் சந்திப்பு அருகே, வாலாஜாபாத் செல்லும் சாலையோரம் தனியாருக்கு சொந்தமான கட்டடம் உள்ளது.
தற்போது, வேறு பயன்பாட்டிற்காக கட்டடம் முழுதும் இடிக்கும் பணி நடந்து வருகிறது.
சாலையோரம் உள்ள கட்டடத்தில், எந்த ஒரு பாதுகாப்பு தடுப்பும் அமைக்காமல், இடிக்கப்படுவதால், அதிலிருந்து வெளியேறும் துாசி, காற்றில் பறந்து வாகன ஓட்டிகளில் கண்களில் விழுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
அதேபோல், சாலையோரம் நடந்து செல்வோர் மீது, கட்டட துகள்கள் விழுவதால் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, பாதுகாப்பான முறையில் தடுப்பு அமைத்து, கட்டடத்தை இடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.