/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மண் உள்வாங்கியதால் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் மண் உள்வாங்கியதால் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் உள்வாங்கியதால் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் உள்வாங்கியதால் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் உள்வாங்கியதால் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 22, 2025 12:52 AM

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில், பாதாள சாக்கடை பணிக்காக குழாய் பதிக்கப்பட்ட இடத்தில், மண் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, தாமல்வார் தெருவில், பாதாள சாக்கடை பணிக்காக, கடந்த வாரம் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது.
பணி முடிந்ததும், சாலையை சமன்படுத்தி முறையாக சீரமைக்காமல், பெயரளவிற்கு மண்ணை கொடி பள்ளத்தை மூடியுள்ளனர்.
இதனால், நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரத்தில் பெய்த மழையால், பள்ளத்தில் மண்ணால் மூடிய பகுதியில், மண் உள்வாங்கியதால், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், தாமல்வார் தெருவில், மண் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ள சாலையை, 'கான்கிரீட்' கலவை வாயிலாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.