/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பல்லாங்குழியான பேரீஞ்சம்பாக்கம் சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் பல்லாங்குழியான பேரீஞ்சம்பாக்கம் சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பல்லாங்குழியான பேரீஞ்சம்பாக்கம் சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பல்லாங்குழியான பேரீஞ்சம்பாக்கம் சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பல்லாங்குழியான பேரீஞ்சம்பாக்கம் சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 01, 2025 01:14 AM

ஸ்ரீபெரும்புதுார்:போக்குவரத்திற்கு லாயக்கற்று பல்லாங்குழியான பேரீஞ்சம்பாக்கம் சாலையால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இப்பகுதியினர் தங்களின் பல்வேறு தேவைக்காக பேரீஞ்சம்பாக்கம் பிரதான சாலையை பயன்படுத்தி, காரணித்தாங்கல் வழிய, படப்பை, ஒரகடம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த பிரதான சாலை, சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் செல்லும் போது, குண்டும் குழியுமான சாலையில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.