/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாதில் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் திணறல் வாலாஜாபாதில் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் திணறல்
வாலாஜாபாதில் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் திணறல்
வாலாஜாபாதில் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் திணறல்
வாலாஜாபாதில் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : செப் 22, 2025 12:48 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ராஜவீதியில், வியாபாரிகள் சாலையோரத்தை ஆக்கிரமித்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் ராஜவீதி உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களுக்கான வழித்தடமாகவும் ராஜவீதி உள்ளது.
ராஜவீதியில், 1 கி.மீ., துாரத்திற்கு சாலையின் இருபுறமும் பல்வேறு கடைகள் உள்ளன. இவ்வாறு கடை வைத்துள்ள வியாபாரிகள், விற்பனை பொருட்களை கடைக்கு வெளியே வைத்து சாலையை ஆக்கிரமித்து உள்ளனர்.
மேலும், கடை விளம்பர பலகை வைத்தல் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் போன்றவையாலும் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
இதனால், ராஜவீதி வழியாக இயங்கும் வாகனங்கள் ஒன்றை யொன்று கடந்து செல்ல வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி வாகனங்கள், கம்பெனி பேருந்துகள், கனரக வாகனங்கள் ஒரே நேரத்தில் இயக்கப்படுகின்றன.
அச்சமயம், சாலையோர ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் ராஜவீதியின் இருபுறத்திலும் கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க, சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.