/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து புகை அடிப்பு காஞ்சி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து புகை அடிப்பு
காஞ்சி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து புகை அடிப்பு
காஞ்சி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து புகை அடிப்பு
காஞ்சி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து புகை அடிப்பு
ADDED : மே 30, 2025 10:47 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகளில், 1,008 தெருக்கள் உள்ளன. கோடை வெயிலிலும், கடந்த சில நாட்களாக காஞ்சிபுரத்தில் பெய்த மழையின் காரணமாக, தாழ்வான பகுதியிலும், துார்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்களிலும் தேங்கிய மழைநீரால் காஞ்சிபுரம் நகரில் கொசுத்தொல்லை அதிகரித்துஉள்ளது.
குறிப்பாக மஞ்சள் நீர் கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகளான பல்லவர்மேடு, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், நகரவாசிகள் இரவில் துாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், கொசு மருந்து புகை அடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி சுகாதார பிரிவினர், மாநகராட்சி முழுதும், சுழற்சி முறையில், வார்டு வாரியாக கொசு மருந்து புகை அடிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.