/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவருக்கு 15 ஆண்டு சிறை திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவருக்கு 15 ஆண்டு சிறை
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவருக்கு 15 ஆண்டு சிறை
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவருக்கு 15 ஆண்டு சிறை
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவருக்கு 15 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 04, 2025 10:25 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள பண்ருட்டி கண்டிகையை சேர்ந்தவர் பிரகாஷ், 31.
இவர், 2017ல், வாலாஜாபாத் அருகே வசித்து வந்த 20 வயது பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி, இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.
திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட பெண், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரகாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு, காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், பிரகாஷுக்கு மூன்று பிரிவுகளின் கீழ், 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11,000 ரூபாய் அபராதமும் விதித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல் நேற்று தீர்ப்பளித்தார்.