/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வி.ஏ.ஓ., வீட்டில் நகை திருடியவர் கைது வி.ஏ.ஓ., வீட்டில் நகை திருடியவர் கைது
வி.ஏ.ஓ., வீட்டில் நகை திருடியவர் கைது
வி.ஏ.ஓ., வீட்டில் நகை திருடியவர் கைது
வி.ஏ.ஓ., வீட்டில் நகை திருடியவர் கைது
ADDED : ஜூன் 01, 2025 12:22 AM
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன், 46; சிறுமாங்காடு கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி காயத்ரி, தலைமை செயலக ஊழியர்.
இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். துரைமுருகனின் தாயார் ராணி ஏரி வேலைக்கு சென்றுவிடுவார்.
இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி அன்று, கிராம நிர்வாக அலுவலரின் மனைவி காயத்ரி, பீரோவை திறந்த போது, 26 சவரன் தங்க நகைகள் காணவில்லை என, சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே கிராமத்தைச் சேர்ந்த கவுதமன், 25. திருடியது தெரிய வந்தது.
கவுதமனை கைது செய்த சுங்குவார்சத்திரம் போலீசார், அவரிடம் இருந்த 25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.