Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ யூரியாவுடன் இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்றால் உரிமம் ரத்து

யூரியாவுடன் இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்றால் உரிமம் ரத்து

யூரியாவுடன் இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்றால் உரிமம் ரத்து

யூரியாவுடன் இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்றால் உரிமம் ரத்து

ADDED : ஜூன் 24, 2025 12:42 AM


Google News
காஞ்சிபுரம்,

யூரியா உரத்துடன் இணை உரங்களை விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என, தனியார் கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், யூரியா உரம் பதுக்கி விற்பனை செய்வதாக வாலாஜாபாத் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செய்தியை தொடர்ந்து, வாலாஜாபாத் வட்டாரத்தில் இருக்கும் தனியார் உரக்கடைகளில் நேற்று முன்தினம் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 450 டன் யூரியா கூடுதலாக இருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், யூரியா உரத்துடன் இணை மருந்துகளை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்றால், உர விற்பனை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

உர விற்பனை தொடர்பான புகார்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் தரக் கட்டுப்பாடு உதவி இயக்குனரை 63828 25785 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us