/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இரட்டைதாலீஸ்வரர் கோவிலில் வரும் 26ல் லட்ச தீப விழா இரட்டைதாலீஸ்வரர் கோவிலில் வரும் 26ல் லட்ச தீப விழா
இரட்டைதாலீஸ்வரர் கோவிலில் வரும் 26ல் லட்ச தீப விழா
இரட்டைதாலீஸ்வரர் கோவிலில் வரும் 26ல் லட்ச தீப விழா
இரட்டைதாலீஸ்வரர் கோவிலில் வரும் 26ல் லட்ச தீப விழா
ADDED : ஜூன் 21, 2025 06:42 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் இரட்டைதாலீஸ்வரர் கோவிலில், வரும் 26ல் லட்ச தீப விழா நடக்க உள்ளது.
உத்திரமேரூரில், மனோன்மணி அம்பாள் சமேத இரட்டைதாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். இங்கு, வரும் 26ல் லட்ச தீப விழா நடக்க உள்ளது.
அதில், காலை 8:00 மணிக்கு, 108 சங்கு ஹோமம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு லட்ச தீப விழாவும் நடக்க உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.