/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கிணற்று நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி கிணற்று நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி
கிணற்று நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி
கிணற்று நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி
கிணற்று நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி
ADDED : ஜூன் 16, 2025 12:55 AM
உத்திரமேரூர்:அழிசூரில், கிணற்றில் குளிக்க சென்ற கூலித் தொழிலாளி, நீரில் மூழ்கி இறந்தார்.
பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, அழிசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 41 ; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் இறப்பு நிகழ்வில் பங்கேற்றார்.
பின், மாலை 5:00 மணியளவில், அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில், நண்பர்களுடன் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது, அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் உள்ள நீரில் மூழ்கியுள்ளார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீரில் மூழ்கிய பெருமாள் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து, பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.