/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்
பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்
பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்
பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 14, 2025 09:25 PM
காஞ்சிபுரம்:அருந்ததியர்பாளையம் கிராமத்தில் பெரியாண்டவர் கோவிலில் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, திருமால்பூர் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, புதிதாக பெரியாண்டவர் உற்சவர் சிலை செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கு கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, நாளை, காலை 6:30 மணிக்கு கரிக்கோலம் நிகழ்ச்சியும், 10:00 மணி அளவில் பால்குட ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து, பிற்பகல், 12:00 மணிக்கு கலசப் புறப்பாடு மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.