/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பெரியாண்டவர் கோவிலில் உற்சவருக்கு கும்பாபிஷேகம் பெரியாண்டவர் கோவிலில் உற்சவருக்கு கும்பாபிஷேகம்
பெரியாண்டவர் கோவிலில் உற்சவருக்கு கும்பாபிஷேகம்
பெரியாண்டவர் கோவிலில் உற்சவருக்கு கும்பாபிஷேகம்
பெரியாண்டவர் கோவிலில் உற்சவருக்கு கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 16, 2025 11:59 PM

காஞ்சிபுரம், அருந்ததியர்பாளையம் பெரியாண்டவர் கோவிலில் உற்சவருக்கு கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, திருமால்பூர், அருந்ததியர்பாளையம் கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு, புதிதாக பெரியாண்டவர் உற்சவர் சிலை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு கும்பாபிஷேக விழா விமரிசையாக நேற்று நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு, நேற்று காலை 6:30 மணிக்கு கரிக்கோலம் நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு பால்குட ஊர்வலமும் நடந்தது.
அதை தொடர்ந்து, காலை 11:45 மணிக்கு கலசப் புறப்பாடு மற்றும் பிற்பகல் 12:05 மணிக்கு பெரியாண்டவர் உற்சவர் சிலைக்கு புனித நீரை ஊற்றி சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இரவு 8:00 மணி அளவில் மலர் அலங்காரத்தில் பெரியாண்டவர் எழுந்தருளி வீதியுலா வந்தார்.