/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : செப் 14, 2025 11:01 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, சித்தேரிமேடு வெள்ளேரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று, காலை 8:00 மணி அளவில் யாக சாலை பூஜையும். அதை தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கலசப் புறப்பாடு நடந்தது. இதையடுத்து, காலை 9:50 மணிக்கு கோவில் கோபுரத்தின் மீது, சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
சித்தேரிமேடு கிராமத்தினர் ஓம்சக்தி என கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர். இரவு 8:00 மணி அளவில் மலர் அலங்காரத்தில் வெள்ளேரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீபெரும்புதுார் பண்ருட்டி கங்கையம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பண்ருட்டி ஊராட்சியில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு, பொதுமக்கள் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக, யாக சாலை அமைக்கப்பட்டு, ஏழு நாள் யாக பூஜைகள் நடந்தன. இதையடுத்து, நேற்று, காலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜை நடந்தது.
அதை தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, யாக சாலையில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோவில் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.