/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 24, 2024 10:33 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பிப்., 11ல் பாலாலயம் நடந்தது. திருப்பணியாக ராஜகோபுரம் மற்றும் கோவிலில் உள்ள பிற கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டன.
பஞ்ச சந்தி விநாயகர், துர்க்கை, நடராஜர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னிதி வாசற்படிகள் முழுதும் பித்தளைக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. கோவில் தரைதளம் மணற்கற்களாலும், கோவில் தெப்பக்குளத்தை சுற்றி நந்தியுடன் கூடிய சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பிப்., 1ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோவில் சர்வசாதகம் சுப்ரமணிய குருக்கள், இஷ்டசித்தி பிரபாகர குருக்கள் தலைமையில் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், 30 யாகசாலைகளில், 4 நவ குண்டங்கள், 63 யாக குண்டங்களில் 160 சிவாச்சாரியார்கள் பங்கேற்கின்றனர்.
பிப்.,1ல், காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து 10:00 மணிக்கு விமானம், ராஜகோபுரம், ரிஷிகோபுரம், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
மதியம் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது, இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது என, காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.