Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வயதுடைய வாக்காளர்கள் அதிகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வயதுடைய வாக்காளர்கள் அதிகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வயதுடைய வாக்காளர்கள் அதிகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வயதுடைய வாக்காளர்கள் அதிகம்

ADDED : ஜன 26, 2024 11:19 PM


Google News
காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும் கடந்த 22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு இருந்தார்.

ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில், 13.3 லட்சம் வாக்காளர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், 19,000 பேர் முதல்முறையாக ஓட்டளிக்கும் வாக்காளர்களாக உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 40 -- 49 வயதிற்கு உட்பட்ட வாக்காளர்கள், 3.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இதன்மூலம் வரக்கூடிய லோக்சபா தேர்தலில், 40 -- 49 வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை அரசியல் கட்சியினருக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வயது வாரியாக உள்ள வாக்காளர்கள் விபரம்


18 - 19 19,063
20 - 29 2,23,475
30 - 39 2,96,203
40 - 49 3,22,981
50 - 59 22,4137
60 - 69 1,41,752
70 - 79 75,517
80+ 30,419
மொத்தம் 13,33,547







      Our Apps Available On




      Dinamalar

      Follow us