/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சிபுரம் கிரிக்கெட் அணி அரை இறுதிக்கு தேர்வுகாஞ்சிபுரம் கிரிக்கெட் அணி அரை இறுதிக்கு தேர்வு
காஞ்சிபுரம் கிரிக்கெட் அணி அரை இறுதிக்கு தேர்வு
காஞ்சிபுரம் கிரிக்கெட் அணி அரை இறுதிக்கு தேர்வு
காஞ்சிபுரம் கிரிக்கெட் அணி அரை இறுதிக்கு தேர்வு
ADDED : ஜன 28, 2024 12:02 AM

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜி.ஆர்.டி., கல்லுாரி மைதானத்தில், ஜி.கே. கிரிக்கெட் அகாடமி சார்பில், லீக் முறையிலான 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
இதில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து 12 அணிகள் பங்கேற்ற தொடரின்.
'லீக்'சுற்றில் காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி, புள்ளி பட்டியலில், முதல் அணியாக தேர்வாகி. காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்று நேற்று விளையாடியது.
இதில், காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணியும்,திருத்தணி அணியும் மோதியது. இதில், காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதி மற்றும் இறுதி போட்டியிலும், வெற்றிபெற்று கோப்பையை பெறுவோம் என, காஞ்சி கிரிக்கெட் அகாடமிபயிற்சியாளரும் அணி தலைவருமான வினோத்குமார் தெரிவித்தார்.