/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பேனர்கள் அகற்ற உள்ளாட்சிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு பேனர்கள் அகற்ற உள்ளாட்சிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு
பேனர்கள் அகற்ற உள்ளாட்சிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு
பேனர்கள் அகற்ற உள்ளாட்சிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு
பேனர்கள் அகற்ற உள்ளாட்சிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு
ADDED : மே 27, 2025 08:46 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஒன்றியங்கள்; 274 ஊராட்சிகள் உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சி; ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், மாங்காடு ஆகிய நகராட்சிகள்; உத்திரமேரூர், வாலாஜாபாத் பேரூராட்சிகள் ஆகிய நகர்புற உள்ளாட்சிகள் உள்ளன.
இந்த உள்ளாட்சிகளில், அனுமதி இன்றி விளம்பர பதாகைகள் அமைக்கப்படுகின்றன. இதனால், விபத்து மற்றும் உயிர் சேதம் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில், விளம்பர பதாகை அமைக்கும் நபர்கள் மீது, தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் மற்றும் அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, விளம்பர பதாகை மற்றும் இரும்பு கட்டமைப்புகளை அகற்ற தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.